பெண் ஒருவர் குளிப்பதை மறைந்து நின்று படம் பிடித்தவர் கைது .

 


 கஹதுடுவ காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் பெண் அதிகாரிகள் தங்குமிடத்தில் குளிப்பதை மறைந்து நின்று கைபேசியில் படம்பிடித்ததாக கூறப்படும் பயிலுநர் காவல் கான்ஸ்டபிள் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தான் குளியலறைக்குச் சென்று நீராடிக்கொண்டிருந்தபோது, ​​சந்தேகநபரான கான்ஸ்டபிள் தன்னை படமெடுப்பதை கண்டதாக குறித்த பெண் கான்ஸ்டபிள் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரான பயிலுநர் காவல்துறை கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்துடன் அவரது கைத்தொலைபேசியும் காவல்நிலைய பொறுப்பதிகாரியில் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபரான காவல்துறை கான்ஸ்டபிளின் கைபேசியில் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று காணொளிகள் இருந்தமை கண்டயப்பட்டதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய காவல்துறை கான்ஸ்டபிளும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.