துருக்கி நிலநடுக்கத்தில் காணாமல் போயிருந்த இலங்கையை சேர்ந்த பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணின் சடலத்தை அவரது மகள் அடையாளம் காட்டியுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
69 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கலகெதர பகுதியை சேர்ந்த குறித்த உயிரிழந்த பெண் 20 வருடங்களுக்கு முன்னர் துருக்கி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.