அகில உலக இளம் சைவ மன்றத்தினால் சிவராத்திரி தின விழிப்புணர்வு கொடி வாரம் அனுஸ்டிப்பு!!









மகா சிவராத்திரியை முன்னிட்டு அகில உலக இளம் சைவ மன்றத்தினால் சிவராத்திரி தின விழிப்புணர்வு கொடி வாரம் வருடந்தோறும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இவ்வருடம் கொடி வாரத்தினை ஆரம்பித்து வைக்கும்முகமாக மட்டக்களப் பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா அவர்களுக்கு சிவராத்திரி தின விழிப்புணர்வு கொடி முதலாவதாக அணிவிக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

உலக இளம் சைவ மன்றத்தின் செயலாளர் நாயகம் கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கீ.குணநாயகம்,
 மன்றத்தின் பொருளாளர் பீ.ஜெயகாந்தன், மன்றத்தின் பிரதிநிதிகளான செல்வி எஸ்.சாம்பவி, செல்வி வி.நியோமிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.

அதேவேளை  இதன்போது இளம் சைவ மன்றத்தின் இலட்சனை பொறிக்கப்பட்ட நினைவுச் சின்னமும் அரசாங்க அதிபரிற்கு வழங்கிக்கப்பட்டதுடன், அனைத்து சம ய நம்பிக்கைகளை உள்ளடக்கிய "உலகெலாம்" எனும் நூலின் பிரதியினை அதன் ஆசிரியர் கலாநிதி நல்லசாமி பிரதீபன் ஐயரினால் இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிற்கு வழங்கி வைத்ததுடன், மாவட்ட செயலக உயரதிகாரிகள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கும் இதன்போது கொடி அணிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.