இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கான விசேட வர்த்தக குறைக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 21 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் எதிர்வரும் 03 மாதங்களுக்கு 50 ரூபாவிலிருந்து ஒரு ரூபா வரை முட்டைக்கான வர்த்தக வரி குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இரண்டு மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் முட்டைக்கான தட்டுப்பாடுடன் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலையில், விரைவில் முட்டையின் விலை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.