அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர்
மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக இன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாங்கத்தல்
நிறைவேற்றப்பட்ட வரிக் கொள்கைக்கு எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின்
ஏற்பாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், நூற்றிற்கு மேற்பட்ட
உத்தியோகத்தர்கள் ஒன்று திரண்டு அரசாங்கத்திற்கு எதிரான கோசங்களை
எழுப்பியவாறு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
வானுயரும் வரிச்சுமை, நாட்டை
விட்டகலும் தொழில் வல்லுனர்கள், நண்பர்களுக்கு வரிச்சலுகை, தொழில்
வல்லுனர்களுக்கு வரிச்சுமை, வைத்தியசாலைகளில் மருந்து மற்றும்
உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்கவும் போன்ற சுலோகங்களை
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.