கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் படகு விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் .

 


மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை, தாந்தாமலை பகுதியில் உள்ள குளத்தில் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியரொருவர் உயிரிழந்துள்ளார்.

அதேசமயம், படகில் பயணித்த 3 மாணவர்கள் காணாமல் போயுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.