நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை ஆராயும்போது அரச ஊழியர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்க முடிந்தமை ஒரு அதிசயமாகவே தெரிகிறது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேர்தலை நடத்த பணம் கொடுக்க மாட்டோம் என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை என்பதை பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் பட்ஜெட்டில் செலவினங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால், அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
எங்களின் செலவினங்களுக்கு சரியான முன்னுரிமை அளித்ததால், நீண்ட எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தோம்.
12 மணி நேர மின்வெட்டை ஓரிரு மணி நேரமாகக் குறைத்துள்ளோம். மருந்துத் தட்டுப்பாடு இருந்தாலும், அன்றைய காலத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவு.
அன்றைக்கு விவசாய உரத்துக்காக கூக்குரலிட்ட விவசாயிகள் தற்போது நெல்லை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, ஒருவித மாற்றம் ஏற்பட்டுள்ளது.