நாட்டில் சில மாவட்டங்களில் சீரற்ற கால நிலை காணப்படும் .

 


இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
 
நாட்டின் ஏனைய பகுதிகளில் குறிப்பாக மழையற்ற காலநிலை நிலவும் என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து காலி வரையான கரையோரப் பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடகிழக்கு திசையிலிருந்து காற்று வீசுவதுடன் காற்றின் வேகம் மணிக்கு 20 தொடக்கம் 30 கிலோ மீற்றராக இருக்கும் எனவும், மன்னாரிலிருந்து புத்தளம், கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வரையான பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.

மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோர கடற்பரப்புகளில் கடல் அலையின் தாக்கம் அதிகரித்து இருப்பதனால் மாலை மற்றும் இரவு வேளைகளில் கடல் அலைகள் சற்று கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.