மட்டக்களப்பில் அறநெறி பாடசாலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் கைந்நூல் விநியோகம்.









மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினால் அறநெறிப் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான ஆசிரியர் கைந்நூல்கள் கையளிக்கும் வைபவம் நேற்று (16) திகதி பிரதேச செயலக மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்து சமய காலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட இக் கைந்நூல்களை, போரதீவுப்பற்று, வெல்லாவெளி பிரதேச மாணவர்களின் நன்மை கருதி, ஆசிரியர்களுக்கு வழங்கும் இச்செயற்பாடு பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகி தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் அறநெறிப் பாடசலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்களுடன், மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், பிரதேச செயலாளரினால் ஆசிரியர்களுக்கு விசேட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் கீழ் இயங்கிவரும் அறநெறிப் பாடசலைகள் 33 இல் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அறநெறி கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன் மற்றும் பிரதேச செயலக கலாசார பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.