பேஸ்புக் விருந்தில் பெண் ஒருவர் துஷ்பிரயோகம் ..

 


பாணந்துறை சுற்றுலா ஹோட்டலில் நடத்தப்பட்ட பேஸ்புக் விருந்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த பெண்கள் 10 பேர் உள்ளிட்ட 41 பேரை தமது பொறுப்பின் கீழ் கொண்டுவந்தனர். 

அதில் பங்கேற்வர்களிடம் இருந்து கஞ்சா, குஷ் போதைப்பொருள் உட்பட மதுபானங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஹோட்டல் உரிமையாளர் மற்றும் அவருடைய மனைவியையும் பொலிஸார் தமது பொறுப்பின் கீழ் கொண்டு வந்துள்ளனர். 

விருந்துபசாரத்தின் போது, போதையில் இருந்த காலியைச் சேர்ந்த பெண்ணொருவரை அறைக்கு தூக்கிச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சம்பவமும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் இளைஞர்கள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் அனைவரையும் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.