இரத்தினபுரி பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு நேற்று தரிசனம் செய்ய வந்த பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.
32 வயதுடைய பெண் நல்லதண்ணி நகரில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய மலை ஏரிக் கொண்டிருந்த வேளையில், ஊசி மலைப் பகுதியில் வைத்து அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு, அவ்விடத்திலேயே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.
பின் அவரது குடும்பத்தினர் நல்லதண்ணி பொலிஸாரின் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.