மரக்கறி விற்பனை நிலையம் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டது.

 


மட்டக்களப்பு ஆயித்தியமலை அன்னை இளைஞர் கழகத்தால் புதிதாக அமைக்கப்பட்ட மரக்கறி விற்பனை நிலையம் மண்முனை மேற்கு பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  திறந்து வைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தனியார் வயல்வெளி ஒன்றில் கூடாரம் அமைத்து இயங்கிவந்த இச்சந்தை, ஏ.யூ லங்கா நிறுவனத்தின் உதவியுடன் தனியான கட்டடத்தில் இயங்க ஆரம்பித்துள்ளது.
மரக்கறி வகைகள்,முட்டை, உள்ளிட்ட பல உற்பத்திப் பொருட்கள் இச்சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.
அன்னை இளைஞர் கழக மரக்கறி விற்பனை நிலைய திறப்பு விழா நிகழ்வில், பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர், உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், ஏ.யூ லங்கா நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி இராஜன் தவசீலன் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.