யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கணித, கணனி துறையின் தலைவராகவும் இருந்து, பாகுபாடற்ற அரும் பணியாற்றி, எம்மிடமிருந்து விடைபெற்ற பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் அமரர் ஆர்.விக்கினேஷ்வரன் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு யாழ் பல்கலைக்கழக, கைலாசபதி அரங்கில் இடம்பெற்றுக் கொண்டிருந்த, அவ் வேளையில், மட்டக்களப்பு கிழக்குப் பல்கலைக்கழகத்திலும் பெரு மதிப்பிற்குரிய பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்களை. நினைவு கூர்ந்து அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது. அவ் கலந்து கொண்ட அனைவரும் மிகவும் துயரத்துடன் காண ப்பட்டனர். இந்த துயர அஞ்சலி நிகழ்வினை கிழக்குப் பல்கலைக்கழக, விஞ்ஞரன பீடாதிபதி பேராசிரியர் வினோபாவா அவர்கள் ஒழுங்குபடுத்தியிருந்தார்.