தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன - கி.சேயோன்

 

தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறிவிட்டதாக தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அக்கட்சியின் வாலிபர் முன்னணியின் தலைவர்
கி.சேயோன்
தெரிவித்துள்ளார்.
மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாங்கள் பாரம்பரிய கட்சி ஒன்றில் இருப்பவர்கள் கட்சி என்கின்ற வகையில் பல கருத்து முரண்பாடுகள் வருவது இயல்பான விடயம் ஆனால் இந்த கட்சியினுடைய நிலைப்பாடுகள் தொடர்பாக இந்த செய்தி தொடர்பாக நான் கூறுகின்ற விடயம் என்னவென்றால் கட்சியினுடைய மறுசீரமைப்பு தொடர்பாக பல விடயங்களை பேசி இருக்கின்றேன் அது தொடர்பாக ஒரு கடிதமும் நான் தலைமைக்கு அனுப்பி இருந்தேன்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படாவிட்டால் நான் இளைஞரணி பதவியில் இருந்து விலகுவதற்கு தயாராக இருக்கின்றேன் என்ற செய்தியைத்தான் கூறியிருந்தேன்.

அது திரிவடைந்து நான் தமிழரசு கட்சியிலிருந்து வெளியேறி விட்டேன் அத்தோடு சில நபர்களோடு முரண்பட்டு அதன் காரணமாக வெளியேறுகின்றேன் என்கின்ற போலியான செய்திகள் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

நான் எந்த இடத்திலும் தமிழரசு கட்சியை குறிப்பாக இந்த தமிழர்களுடைய விடுதலை சார்ந்து, தமிழ் தேசியத்தின் விடுதலை சார்ந்து பயணிக்கின்ற இந்த கட்சியில் இருந்து வெளியேறுவேன் என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை கட்சியினுடைய உறுப்புரிமையில் நான் என்றும் இருப்பேன்.