தற்கொலை செய்ய ஆற்றில் குதித்த பெண் ஒருவர் இளைஞர்களால் மீட்கப்பட்டுள்ளார் .

 


பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்ததாக அளுத்கம தெரிவித்துள்ளார்.

பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல், 9 வயது மகனையும், 1 வயது மற்றும் 6 மாதங்களேயான பெண் குழந்தையையும் அழைத்துச் சென்று பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு, குறித்த பெண் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீரில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் நின்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.

குறித்த பெண் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரண்டு குழந்தைகளையும் அளுத்கம பொலிசார் அழைத்து வந்துள்ளதுடன் அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.