மாத்தறை - வெல்லமடம கடற்பகு தியில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின் ஒத்துழைப்புடன் மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.