மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுகாதார ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு குறைப்பு உட்பட ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி ,போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன் காரணமாக வைத்தியசாலையின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்ததுடன், நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மருந்துகள்,உபகரணங்களின் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்திசெய்,அதிகரித்த வரியை நிறுத்து,
மேலதிக கொடுப்பனவினை சுரண்டாதே போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஏந்தியிருந்தனர்.
தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் இந்த போராட்டத்தினை அனைத்து சேவைகளையும் இடைநிறுத்தி பாரியளவில் முன்னெடுக்கப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.