நாட்டின் பலப் பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.

 


 இரத்தினப்புரி, களுத்துறை, காலி, மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பலப் பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.