மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் காணிப்
பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க
அதிபராக நியமிக்குமாறு வலியுறுத்தி ஓட்டமாவடியில் போராட்டமொன்று
இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அரச பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் இடம்பெற்றது.
வாழைச்சேனை
பொலிஸ் நிலைய சந்தியில் இருந்து போராட்டம் ஆரம்பமாகி, மட்டக்களப்பு
கொழும்பு வீதியினூடாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு பேரணியாகச்
சென்று, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு முகவரியிடப்பட்ட மகஜிரினை பிரதேச
செயலக நிருவாக உத்தியோகத்தர் யூ.எல்.அப்துல் ஹமீட்டிடம் போராட்ட
ஏற்பாட்டாளர்கள் கையளித்தனர்