குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 


பத்தரமுல்லை – சுஹுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு மேலதிக  காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய விடுத்த கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு மேலதிக காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிரதான காவல்துறை பரிசோதகர் தலைமையிலான குழுவொன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் பிரிவில் பல்வேறு முறைகேடுகள் கிடைத்துள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்வதற்காக  பெருமளவானவர்கள் வருகை தருவதாகவும் குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.