மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட புனித திரேசா
மகளிர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு,பாடசாலை
அதிபர் மாலதி பேரின்பநாதன் தலைமையில் இடம்பெற்றது.
புனித ஜோசெப் வாஸ்
சபையின் ஏற்பாட்டில் புனித மிக்கேல் கல்லூரியின் 1975 ஆம் ஆண்டு சாதாரண தர
மாணவர்களின் உதவியுடன் கற்றல் உபகரணங்கள அன்பளிப்பு செய்யப்பட்டன.
நிகழ்வில்
அருட்தந்தை சி வி .அன்னதாஸ் அடிகளார், திரேசா கன்னியர் மட மேலாளர்
அருட்சகோதரி சுலக்சனா, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், எனப் பலர் கலந்து
கொண்டனர்.