இலங்கையிலுள்ள மசாஜ் நிலையம் தொடர்பில் சுற்றுலா பொலிஸ் பிரிவின் பணிப்பாளருக்கு அமெரிக்காவில் இருந்து மின்னஞ்சல் ஊடாக முறைப்பாடு ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த தனது 22 வயதுடைய மகள் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் பணிபுரியும் ஊழியரால் கடுமையாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக, யுவதியின் தந்தை முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளான யுவதி கடந்த டிசம்பர் மாதம் தனது பெற்றோருடன் இலங்கைக்கு விஜயம் செய்து ஹிக்கடுவையில் உள்ள ஹோட்டால் ஒன்றில் தங்கியிருந்தார்.
டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தனது தாயுடன் ஹிக்கடுவையில் உள்ள மசாஜ் நிலையத்திற்கு சென்றதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு மசாஜ் செய்த நபர் தன்னை கடுமையாக பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா திரும்பிய போது மசாஜ் சென்டரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக மகள் கூறியதாகவும், அதற்கமைய, முறைப்பாடு செய்வதாகவும் யுவதியின் தந்தை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விசாரணைகளை
மேற்கொள்ளுமாறு காலி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் காலி சிறுவர் மற்றும்
பெண்கள் பணியகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.