இன்று சீரான வானிலை நிலவும் .

 


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக இன்று சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வட மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது