உலக உணவுத் திட்ட அவசரநிலை இணைப்பாளர் ஜோஸ்பன்ட் முஸோங்காவுடன் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

 

 


மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காலமதி பத்மராஜா தலைமையில் உலக உணவுத் திட்ட அவசரநிலை இணைப்பாளர் ஜோஸ்பன்ட் முஸோங்காவுடன் கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக தெரிவு செய்யப்பட்ட 6 பிரதேச செயலகங்களில் போதிய வருமானமற்ற மக்களுக்கு 60 நாட்களை கொண்ட உலக உணவுத் திட்ட,உலர் உணவு பொதிகள் வழங்கும் செயற்பாட்டில் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்க அதிபரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், சமுர்த்திப் பயனாளிகள், வகைகளில் கிராம உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு உணவு பொதிகள் கையளிக்கப்பட்டிருந்தன.
உலக உணவுத் திட்ட உயரதிகாரி கீரன் பொல்,மட்டக்களப்பு மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதீஸ்குமார், உலக உணவு திட்டம் நிகழ்ச்சி திட்ட உதவியாளர்
பத்மரஜனி கேதீஸ்வரன், வேர்ல்ட் விஷன் அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.