கொக்கட்டிச்சோலையில் மோட்டர் குண்டு மீட்டு செயலிழப்பு




(கனகராசா சரவணன்)


கொக்கட்டிச்சோலை  குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில்  கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை நேற்று வியாழக்கிழமை (23) விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து  சம்பவ தினமான நேற்று 81 ரக மோட்டர் குண்டை விசேட அதிரடிப்படை குண்டு செயலிழக்கும் பிரிவினர் மீட்டு நீதிமன்ற அனுமதியை பெற்று அதனை அந்த இடத்தில் வெடிவைத்து செயலிழக்க செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.