ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இலங்கை தேர்தல் ஆணைக்குழு, பாரிய நிவாரணம் வழங்கியுள்ளதாக இந்திய செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை, திட்டமிட்ட திகதியில் நடத்த இயலாத நிலை உள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த விடயம் தொடர்பிலேயே இந்திய செய்தித்தளம் தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
இது, சர்வதேச நாணய நிதியத்தின் விதிமுறைகளுக்கு இணங்க பொருளாதார சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த ரணில் விக்ரமசிங்கவுக்கு கூடுதல் அவகாசத்தை அளித்துள்ளதாக அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சித் தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கட்சி படுதோல்வி அடையும் என்பது பொதுவான கருத்தாகும்.
அத்தகைய தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனாதிபதியின் நம்பகத்தன்மைக்கு பாரிய சிக்கல் ஏற்படும்.
அத்துடன், நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை அமுல்படுத்துவது ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு இன்னும் கடினமாக இருக்கும் என்றும் இந்திய செய்தித்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.