மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பழனி ஆண்டவர் ஆலய நிர்வாகத்தினால் வருடாந்தம் முன்னெடுத்து வரும் கல்வி மேம்பாட்டு நடவடிக்கையின் கீழ் 2023 ஆண்டு சிவராத்திரி தினத்தினை சிறப்பிக்கும் வகையில் நலிவுற்ற குடும்பங்களில் பாடசாலை செல்லும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டினை மேம்படுத்தும் வகையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனை வைத்திய சாலையின் பழனி ஆண்டவர் ஆலய செயலாளர் டி.ரஜினிகாந்த் ஏற்பாட்டில் வைத்தியசாலை தாதிய முகாமையாளரும் பழனி ஆண்டவர் ஆலய தலைவருமான நாகலிங்கம் சசிகரன் தலைமையில் நடைபெற்ற மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பழனி ஆண்டவர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நித்தியானந்த பகிரத சிவம், போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.கலாரஞ்சனி கணேஷ்லிங்கம், புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஆலய நிருவாக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.