ஆஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் புகலிட கோரிக்கையாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இளம் குடும்பஸ்தரே தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த புகலிட கோரிக்கையாளர் 2013 ஆம் ஆண்டு படகுமூலம் ஆஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு நிரந்தர பாதுகாப்பு விசா கிடைக்காத நிலையில் சுமார் பத்து வருடங்களாக நிரந்தரமற்ற நிலையிலேயே குடும்பத்துடன் வாழ்ந்துவந்துள்ளார். கடும் மன அழுத்தத்துக்கு உள்ளானதாலேயே இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.