இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் முறக்கொட்டாஞ்சேனையில் இடம்பெற்றது.

 


 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் மட்டக்களப்பு முறக்கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற நிலையில், தமிழரசுக் கட்சியின் பணிமனையொன்றும் திறந்து வைக்கப்பட்டது.
கோறளைப்பற்று பிரதேச சபைக்கு தமிழரசுக் கட்சி ஊடாக போட்டியிடும் குழந்தைவேல் பத்மநாதன் தலைமையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில்
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் எனப் பலரும் கலந்துகொண்டனர்.