மட்டக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகத்தினால் "புதிய நாடு புதிய கிராமம்" எனும் தொனிப்பொருளில் பிரதேச செயலாளர் எஸ் . சுதாகர் தலைமையில் ( கரவெட்டி மைதானத்தில் இடம் பெற்றது
இதன் போது பொதுச்சந்தை திறந்து வைப்பு, அதனுடன் வாழ்வாதார உதவியாக கோழி குஞ்சு மற்றும் மரவள்ளி தடி , மரக்கன்றுகள் மற்றும் உலர் உணவு பொதிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாவட்ட காணிப்பிரிவின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி . நவரூபரஞ்சினி முகுந்தன், AU Lanka நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ராஜன் தவசீலன் மற்றும் மண்முனை மேற்கு உதவி பிரதேச செயலாளர் திருமதி சுபா சதாகரன் , நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்எம் றஊப், சமுர்த்தி முகாமையாளர் திருமதி க. வாமதேவன் , தேசிய இளைஞர் மன்ற உதவிப் பணிப்பாளர் மற்றும் கிளைத்தலைவர்கள், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
மேலும் அதிகாரிகளினால் மரக்கன்றுகள் நடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.