நாட்டிற்கு திரும்பி வர வேண்டாம் - டயானா கமகே

 


இக்கட்டான காலங்களில் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படும் தொழில் வல்லுநர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் மீண்டும் நாட்டிற்கு திரும்பி வர வேண்டாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் திருமதி டயானா கமகே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நாடு மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும், தொழில் வல்லுநர்களின் சேவை நாட்டுக்கு மிகவும் இன்றியமையாத தருணத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடாளுமன்றில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கை விளக்க உரையின் பின்னர் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.