சிகண்டி கலை கழகத்தினருக்கான பண்பாட்டு விழுமியங்களை கூறுவதற்னான ஓர் நாள் செயலமர்வு நடைபெற்றது.


 கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் தர்ப்பணா ஜெயமாறன் ஏற்பாட்டில் சித்தாண்டி, சிகண்டி கலை கழகத்தினருக்கான
பண்பாட்டு விழுமியங்களை கூறுவதற்னான ஓர் நாள் செயலமர்வு நடைபெற்றது.
கூத்துப் பாடல் ஆற்றுகை, கலாசார விழிப்புணர்வு கருத்தாடல், கவிதை எழுதுதல் பயிற்சி மற்றும் கதை சொல்லல் என மட்டக்களப்பு மண்ணின் மற்றும் தமிழ் கலையில் பண்பாட்டு வடிவங்கள்
இளையவர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டன.
நிகழ்வில் கிழக்கு மாகாண கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட கலாசார உத்தியோகத்தர் த.மலர்ச்செல்வன், சித்தாண்டி பிரதேச சிறுவர் சிறுமியர் பலர் கலந்து கொண்டனர்.