கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் சயனைட் உடலுக்குள் கலந்ததால் உயிரிழந்ததாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று (08) அளுத்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மரணத்திற்கான காரணம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட மருத்துவ சாட்சியங்கள் முரண்பாடானவை என ஷாப்டர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்தார்.