சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை.

 


சமூக ஊடகங்கள் வாயிலாக இழிவுபடுத்தும் மற்றும் குற்றம் சாட்டும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என ஜனாதிபதி சட்டத்தரணி யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டால் அது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிட முடியும். பொலிஸ் நிலையங்ளில் உருவாக்கப்பட்டுள்ள விசேட பிரிவின் ஊடாக இது குறித்து விசாரிக்கப்படும்.

குற்றவியல் சட்டத்தின் கீழ் இதற்கு தண்டனை வழங்க முடியும். இழிவுபடுத்தல் மற்றும் குற்றச்சாட்டுக்களை பிரச்சாரம் செய்வதும் குற்றமாகும் என்று அவர் குறிப்பிட்டார்.