நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் சுற்றுசூழலை
தூய்மைப்படுத்தும் சமூக நலன்சார் பணியாளர்களின் சிரமதான பணியின் ஓர்
அங்கமாக, மட்டக்களப்பு நகர் வாவிக் கரையோரத்தை அண்டிய பகுதிகளில்
காணப்பட்ட, பிளாஸ்ரிக் கழிவுகள் இன்று அகற்றப்பட்டன.
மட்டக்களப்பு சமூக நலன்சார் பணியாளர்கள் சமூகபணிகளில் ஒன்றாக சுற்று சூழலை
தூய்மைபடுத்தும்
நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதோடு, டெங்கு நுளம்பு ஒழிப்பு மற்றும்
மக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிபொருட்களை அகற்றும்பணிகளை
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுத்து வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.