புத்தள பிரதேசத்தில் சில கிராமங்களில் இன்று (22) பிற்பகல் 11.47 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இதனை தாங்கள் உணர்ந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு வினாடிக்கு மட்டுமே நிலம் நடுங்கியதாக தெரிவித்த மக்கள்,அப்போது மயில்கள் உள்ளிட்ட பறவைகள் கடுமையான சத்தங்களை எழுப்பிக்கொண்டு பறந்தன என்றனர்.
ஹதபானகல, புத்தள மற்றும் வெல்லவாய ஆகிய பிரதேசங்களை அண்மித்த பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தின் போது மாணவர்கள் மைதானத்துக்கு அனுப்பப்பட்டதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாடிக்கட்டிடங்களில் இருந்தவர்கள் நில நடுக்கத்தை உணர்ந்துள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.
குறித்த நில நடுக்கம் தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.