முதல் நிவாரணப் பொதியை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

 


இலங்கைக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முதல் நிவாரணப் பொதியை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்திற்கமைய, இலங்கைக்கு நிதி உத்தரவாதம் வழங்குவதாக பரிஸ் கிளப் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பை சர்வதேச நாணய நிதியம் வரவேற்றுள்ளது.

நிதி நெருக்கடியில் இருந்து இலங்கை மீள உதவுவதற்காக சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதி நிவாரணம் பெறுவதற்கு தேவையான நிதி உத்தரவாதங்களை பெறுவதற்கு இலங்கை தனது இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

உரிய நோக்கத்திற்குத் தேவையான போதுமான நிதிச் சான்றிதழ்களைப் பெறுதல் உள்ளிட்ட ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தவுடன் இலங்கைக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முதல் நிவாரணப் பொதியை உடனடியாக  வழங்க இணக்கம் கிடைத்துள்ளது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்தள்ளது.