நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு சிறைச்சாலையில்
சிறு குற்றச் செயல்களுக்காகத் தண்டனை அனுபவித்து வந்த நான்கு கைதிகள், பொது
மன்னிப்பின் கீழ்
விடுதலை செய்யப்பட்டதாக, மட்டக்களப்புச் சிறைச்சாலை அத்தியட்சர் என்.பிரபாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
சிறைச்சாலை அத்தியட்சர் என்.பிரபாகரனின் வழிகாட்டலின் கீழ், பிரதம ஜெயிலர்
டப்ளியு.ஏ.ஜெ.டப்ளியு.அரவிந்த முன்னிலையில் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.