13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும், அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் நேற்று (08) இதனை கூறினார்.
அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் நிறைவேற்றும் என்று கூறிய அவர் தான் முதலமைச்சராக இருந்த போது, இதனை நன்றான உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.
இதனால், சமஷ்டியை கோருவதுடன், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சிறந்தது என்றும், அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இடையில் என்ன நடக்கும் என்பது தெரியாத என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் தற்போது தீர்வை தருவதாக கூறியுள்ள நிலையில், நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.