அரசாங்கத்திற்கு நேரடிச் செய்தியை வழங்கியதாக தொழிற்சங்க கூட்டு மையம் (TUCC)தெரிவித்துள்ளது.

 


அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA), இலங்கை மின்சார சபை (CEB), பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA), தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை (NWS&DB), பல வங்கிகள், இலங்கை விமான போக்குவரத்து,கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் (SLATCA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) உட்பட 40 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் புதிய வருமான வரிக் கொள்கையை எதிர்த்து  நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்தன.

கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பெரும் குழுக்கள் ஒன்று திரண்டதால் கோட்டையின் பிரதான வர்த்தக நிலையமானது ஸ்தம்பித்தது.

 தொழிற்சங்க நடவடிக்கை பூரண வெற்றியடைந்துள்ளதாகவும், புதிய வரிக் கொள்கைகளால் மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அரசாங்கத்திற்கு நேரடிச் செய்தியை வழங்கியதாகவும் தொழிற்சங்க கூட்டு மையம் (TUCC)தெரிவித்துள்ளது.

TUCC செயற்குழு உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க கூறுகையில், அதிக சம்பளம் பெறும் மக்களுக்கு திடீரென நடைமுறைப்படுத்தப்பட்ட அதிக சம்பள வரி அநீதியானது, ஏனெனில் அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அதற்கேற்ப பராமரிக்க வேண்டும். இதன் காரணமாக மருத்துவர்கள் உட்பட பெரும்பாலான தொழில் வல்லுநர்கள் புலம்பெயர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் என ஜயசிங்க கூறினார். அவர்களால் உயிர் பிழைக்க முடியாத சூழ்நிலைக்கு வந்துள்ளனர் என அவர் கூறினார்.