அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்
பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன், 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 28 வயதான அவர், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.