கல்லடி முகத்துவாரம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 151 குடும்பங்களிற்கு தலா 10 கிலோ வீதம் அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

 


 
 
நாட்டில் உள்ள வறிய மக்களுக்கு 10 கிலோ அரிசிப்பொதி வழங்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நேற்று   (26) திகதி காலை 10.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களிலும் குறித்த வேளையிலேயே அரிசிப்பொதி வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்ற நிலையில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் இந்நிகழ்வுகள் பிரதேச செயலாளர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இதன் ஒரு அங்கமாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வீ.வாசுதேவன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள கல்லடி முகத்துவாரம் கிராம சேவகர் பிரிவில் உள்ள 151 குடும்பங்களிற்கு தலா 10 கிலோ வீதம் அரிசிப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.