2023- வருடத்துக்கான தரம் 01 மாணவர்களின் தேசிய ரீதியான வரவேற்பு விழா .










மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் கல்லூரியில் இன்று 29-03.29  பாடசாலை அதிபர் திருமதி நவகீதா தர்ம சீலன் தலைமையில் வரவேற்பு விழா  வெகு சிறப்பாக நடை பெற்றது .
இவ் நிகழ்வில் புதிய மாணவர்களை ஸ்ரீ  இராமகிருஷ்ண மிஷன் திருத்தலத்தில் இருந்து சுவாமிஜியின் ஆசீர்வாதத்துடன் அங்கிருந்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு தரம் -02- மாணவர்களினால் மாலை அணிவித்து உற்சாகமாக வரவேற்கப்பட்டனர்.
இந்த நிகழ்வை சிறப்பிக்கும் முகமாக  தரம் 02 மாணவர்களின் காலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதோடு  , அதிகாரிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு நிகழ்வை  சிறப்பித்தனர்