2023-ம் ஆண்டுக்கான தரம் 01- மாணவர்களுக்கு வரவேற்பு விழா .

 


 

 மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் 2023 ஆம் ஆண்டில் தரம் ஒன்றில் புதிதாக இணைந்துள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது.


வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், தரம் ஒன்று மாணவர்கள் பாடசாலை நுழைவாயிலிலிருந்து தரம் மூன்று மாணவர்களால்  மலர்மாலை அணிவிக்கப்பட்டு, வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து தரம் ஒன்று வகுப்ற்கு ஆரம்பப்பிரிவு மாணவர்களால் அழைத்து வரப்பட்டனர்.


இந்நிகழ்வில், தரம் ஒன்று வகுப்பாசிரியை திருமதி புஸ்பராணி விஸ்வநாதன், ஆரம்பப்பிரிவு ஆசிரியர்கள், பிரதி அதிபர் உமாபரமேஸ்வரம் மற்றும் ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் ரி.இமானுவேல், உடற்கல்வி ஆசிரியர் ரி.சுரேஸ் ஆனந் உட்பட பலர் கலந்து கொண்டனர்.