மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சர்வதேச மகளிர்தின நிகழ்வு - 2023 மண்முனைப்பற்று சிறுவர் பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் மண்முனைப்பற்று பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் காலை நிகழ்வுகளாக மகளிர் சங்கங்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும், சூரியா பெண்கள் அமைப்பினால் வீதி நாடகமும் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி விற்பனையில் பற்கேற்ற மகளிர் சங்க உறுப்பினர்களுக்குப் பாராட்டுப் பத்திரம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலிருந்தும் மகளிர் சங்க உறுப்பினர்கள் இருவருக்கு தலா 5 வாழைக்கன்று, 5 மாதுளங்கன்று வீதம் வழங்கி அவர்களது வீடுகளில் நடுகை செய்யப்பட்டது.
கோவில்குளம் கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்ற மரநடுகை வைபவத்தில் பிரதேச செயலாளர், உதவி பிரதேச செயலாளர், மற்றும் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர். மேலும் அலுவலக உத்தியோகத்தர்களுக்கான மற்றுமொரு மகளிர் தின நிகழ்வு பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உத்தியோகத்தர்களின் கலை நிகழ்வுகளும், விளையாட்டு நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது