நந்தவனம் பவுண்டேசனின் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழா-2023














சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நந்தவனம் பவுண்டேசன் வருடாந்தம் நடத்தும் விருது வழங்கும் விழா  2023.03.12ஆம்திகதி ஞாயிற்றுக் கிழமை காலை
9.30 மணிக்கு சென்னை நுங்கம்
பாக்கத்தில் உள்ள பார்க் எலேன்ஸ்
ஹோட்டலில் நடைபெற்றது.

லிம்ரா பேக்ஸ் பிரைவட் லிமிட்டட்
வழங்கும் இவ்விழாவில் இலக்கியப்
புரவலர் ஹாசிம் உமர், தினகரன்,தினகரன் வாரமஞ்சரி பத்திரகைகளின் பிரதம ஆசிரியர் தே. செந்தில்வேலவர், சென்னை மதுரா டிரவல்ஸ் நிறுவனத்தின் தலைவர்
வி.கே. டீ. பாலன், கனடா விழித்தெழு பெண்கள் அமைப்பின்
இயக்குனர் சசிகலா நரேந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ளார்கள்.

நந்தவனம் பவுண்டேசனின்
தலைவர் நந்தவனம் சந்திசேகர்
இதற்கான ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளார். இந்த விழாவில் 25
பெண்கள் விருதுகள் வழங்கி கௌர
விக்கப்பட்டனர்.

 இலங்கையைச் சேர்ந்த அமிர்தரத்தினம் றுத்றா, சந்திரிக்கா நீரோசன்,கீர்த்திகா மித்ரன், தஸ்யானி ரந்தீப், கவிதா பாரதி, பிரபா அன்பு
ஆகியோர் உட்பட 25 பேர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தியா, மலேசியா, சிங்கப்பூர்,
கனடா, ஆகிய நாடுகளைச்
சேர்ந்த பெண்களும் விருது
கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.