இதன்போது பிரதேச மகளிர் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டதுடன் அவர்களுக்கான பரிசில்களும், மகளிர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
சுயதொழில் முயற்சியினை ஊக்குவிக்கும் முகமாக ஐந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தலா 10,000/= ரூபா வீத நிதி உதவியும், 50,000/= ரூபா சுழற்சிமுறைக் கடனும், எட்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
தெரிவு செய்யப்பட்ட சிறந்த மகளிர் சங்க உறுப்பினர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் மற்றும் பிரதம அதிதி உட்பட ஐந்து பெண்களுக்கு சிறந்த மகளிருக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சட்டத்தரணி திருமதி. மயூரி ஜனன், உதவி பிரதேச செயலாளர் நிருபா பிரிந்தன், கணக்காளர் ஏ. டிலானி, நிருவாக உத்தியோகத்தர் என். கோமதி, மேலதிக பதிவாளர் ஏ.புனிதவதி, கிராம நிருவாக உத்தியோகத்தர் ரி.லிங்கேஸ்வரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எஸ்.இராசலிங்கம், சமூக சேவை உத்தியோகத்தர் பி. டிமலேஸ்வரன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபா நெல்சன், சேர்கிள் நிறுவன முகாமையாளர் அ.ஜானி காசிநாதர், சிவில் அமையத்தின் இணைப்பாளர் ஆர்.ரமேஸ், மாவட்ட பெண்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ம.லெட்சுமி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், தலைவர்கள் மற்றும் மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.