பெண்களுடைய
அடைவுகளை அங்கீகரிப்போம் எனும் தொனிப் பொருளில் 2023 ஆம் ஆண்டு சர்வதேச
மகளிர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் சமூக செயல்பாட்டாளர்களாக
செயற்படும் பெண் பிரதிநிதிகள் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
கிழக்கு
சமூக அபிவிருத்தி மையத்தின் உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில்
நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.எல்.எம்.புகாரி தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில்
அதிதிகளாக கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல்
கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பாரதி கென்னடி மற்றும் சமூக மட்ட வளையமைப்பின்
பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
2023 சர்வதேச மகளிர் தினத்தை
சிறப்பிக்கும் வகையில் உள்ளாட்சி மன்றங்களின் தெரிவு செய்யப்பட்ட பெண்
உறுப்பினர்களின் வலையமைப்பு, மனித உரிமை பெண் செயல்பாட்டாளர்கள் பெண்கள்
உதவி வலையமைப்பு ,இளைஞர் நிழல் சபையினர், இலங்கை குடும்பத்திட்ட சுகாதார
நிலையம் என சமூக மட்டத்தில் செயல்படும் மகளிர் அமைப்புக்களிடையே
கலந்துரையாடல்களும் இடம்பெற்றது.
இதன்போது பெண் பிரதிநிதிகள் கௌரவிக்கப்பட்டனர்.