ஐக்கிய அமெரிக்காவிலுள்ள முன்னணி அரச சார்பற்ற நிறுவனங்கள் சில இலங்கைக்கு 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருந்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளதாக அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அமெரிக்காவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் கோரிக்கைக்கமையவே குறித்த நன்கொடை வழங்கப்பட்டதாக வொஷிங்டன் தூதரகம் தெரிவித்துள்ளது.