நாய்க் கூட்டில் வைத்து மனைவியையும் மகனையும் சுட்டுக்கொன்ற நபருக்கு 30 வ்ருட சிறைத்தண்டனை .

  


தமது மனைவியையும் இளைய மகனையும் கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் அமெரிக்க கரோலின் மாகாணத்தை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் அலெக்ஸ் முர்டாவிற்கு 30 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் திகதி தமது பண்ணையில் நாய்களுக்கான கூட்டில் வைத்து அவர் அவர்களை சுட்டு கொன்றுள்ளார்.

ஒரு வருடமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகம் இன்றி அவர் கொலை செய்தார் என்பது தற்போது நிரூபணமானதாக நீதிமன்ற தீர்ப்பின் போது குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 30 வருட தண்டனை காலத்தில் எந்த காரணத்திற்காகவும் அவருக்கு மன்னிப்போ அல்லது தண்டனை குறைப்போ இடம்பெறாது என தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.